மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய (மார்ச் 29) இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை வான்கெடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 221 ரன்களை இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி 19.1 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்து அபார பெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்தி