கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று (மே.20) நடைபெற்றது. இதில், கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்நிலையில், இந்த போட்டியில் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, பெயில்ஸை வேகமாக தட்டிவிட்டார். கிரிக்கெட் உபகரணங்களை முறையற்ற வகையில் கையாண்டதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவரது போட்டி ஊதியத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு குறைமதிப்புப் புள்ளியும் (demerit point) வழங்கப்பட்டுள்ளது.