சென்னை: பணி நிரந்தரம், சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்கள் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், அரசு உறுதி அளித்திருக்கக்கூடிய குறைந்தபட்ச ஊதிய உயர்வை கவனத்தில் கொண்டு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அனைத்து பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.