நாடாளுமன்ற வளாக படிக்கட்டுகளில் இறங்கும்போது காங்கிரஸ் எம்.பி சசி தரூர் எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை தாங்கி பிடித்ததால், அவர் காயமின்றி மீட்கப்பட்டார். இதற்கிடையே, 8 எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் அவையில் கடும் முழக்கங்களை எழுப்பின. இந்நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.