நெதர்லாந்துக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ராப் ஜெட்டனை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசித்தார். பசுமை ஹைட்ரஜன், செமிகண்டக்டர், நீர் மேலாண்மை துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, குஜராத் மாநிலம் தோலேராவில் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலையை அமைப்பதற்காக, டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் நெதர்லாந்தின் ஏ.எஸ்.எம்.எல். நிறுவனங்களுக்கு இடையே பிரதமர் மோடி முன்னிலையில் நேற்று (மே 16) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.