அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிப்பவர் மார்செலா இக்லேசியா (47). தன்னைத் தானே மனித பார்பி என சொல்லும் இவர் சரும பராமரிப்பில் ஆர்வம் கொண்டவர். தற்போது வரை 99,000 டாலர் வரை ஒப்பனைக்காக செலவிட்டுள்ளார். மேலும் சர்க்கரை பானங்கள், சோயா பொருட்கள், ஆல்கஹால் ஆகியவற்றை சாப்பிடுவது இல்லையாம். இந்நிலையில், தான் இளமையாக இருப்பதற்காக தனது மகனின் ரத்ததை தன் உடலில் செலுத்தவுள்ளதாக மார்செலா கூறியுள்ளார். 23 வயதான மகன் ரோட்ரிகோவின் ரத்தம் மூலம் மார்செலா விரைவில் ரத்த மாற்று சிகிச்சை செய்து கொள்ளவுள்ளார்.