உத்தரப் பிரதேச மாநிலத்தில், மருமகனுடன் வீட்டை விட்டு ஓடிய மாமியார், அவரிடம் இருந்த நகைகளை அபேஸ் செய்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனிதா தேவி என்பவர் தனது மருமகன் ராகுலுடன் ஓடிவிட்டார். பின்னர், அவர் ராகுலை ஏமாற்றி அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு தனது மைத்துனருடன் சேர்த்து தப்பிச் சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், அனிதாவை போலீசார் தேடி வருகின்றனர்.