ஆஸ்திரேலியாவின் 'ஜியோகிராஃப் மரைன் ரிசர்ச்' அமைப்பின் ட்ரோன் கேமராவில் பதிவு செய்யப்பட்ட, தாய் டால்பின் ஒன்றின் பாசப் போராட்டம் இணையத்தில் வெளியாகி பலரையும் நெகிழ வைத்துள்ளது. 'ஃப்ராகிள்' என்று பெயரிடப்பட்ட அந்த தாய் டால்பின், இறந்துபோன தனது குட்டியின் உடலை விட மனமில்லாமல் இந்திய பெருங்கடல் வழியாக தொடர்ந்து 6 நாட்கள் சுமந்தபடியே நீந்தியுள்ளது. விலங்குகளின் உணர்வுப்பூர்வமான பாசத்தை வெளிப்படுத்தும் இந்த காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது.
நன்றி:SunNews