புதுக்கோட்டை மாவட்டம் பூவரசக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் கேம்கள் விளையாடி வந்துள்ளார். அதில், சுமார் ரூ.80 ஆயிரம் இழந்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியில் இருந்த அப்பெண், சிங்கப்பூரில் வேலை செய்து வரும் தனது கணவரிடம் தான் தற்கொலை செய்துகொள்ளவுள்ளதாக கூறியுள்ளார். தொடர்ந்து, தனது குழந்தையை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.