குழந்தையின் கையை உடைத்த தாய்.. அதிர்ச்சி

கேரளாவின் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த பிஜு, தீபா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து ஆண் நண்பருடன் தீபா வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களது ஒன்றரை வயது சிறுவனை அடித்து உதைத்து கையை உடைத்து காயப்படுத்திவிட்டு சிறுவனின் தாய் மற்றும் அவரது காதலன் தலைமறைவாகியுள்ளனர். இதுகுறித்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். பெற்ற மகனை தாயே அடித்து உதைத்து கை உடையுமளவிற்கு காயப்படுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி