தமிழகத்தில் கொசு உற்பத்தி மற்றும் தண்ணீர் தேக்கம் தொடர்பான புகார்கள் மீது 48 மணி நேரத்திற்குள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வீடுகளின் பூந்தொட்டிகள் மற்றும் மொட்டை மாடிகளில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதைத் தவிர்க்க பொதுமக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.