இணையத்தில் தனது பெயரில் பரவி வரும் AI புகைப்படங்கள் குறித்து நடிகை ருக்மிணி வசந்த் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “எனது பெயரில் இணையத்தில் பகிரப்பட்டு வரும் புகைப்படங்கள் முற்றிலும் போலியானவை. இது ஒரு தனிநபரின் தனியுரிமையை சீர்குலைக்கும் கடுமையான விதிமீறல். போலிப் படங்களை உருவாக்கியவர்கள் மற்றும் பகிர்ந்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசாரிடம் சட்டப்பூர்வமாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் இதற்கு ஆதரவளிக்க வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளார்.