கோவை சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று (மே.24) சிறுமியின் குடும்பத்தினரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து, இதுகுறித்து அவர் கூறுகையில், “விஜய் முதலமைச்சராக பதவியேற்ற 13 நாட்களில் 30க்கும் அதிகமான குற்றங்கள் நடந்துள்ளன; சட்டம் ஒழுங்கை சரி செய்யாமல் விதவிதமான விளம்பர பரப்புரைகளில் முதலமைச்சர் கவனம் செலுத்தி வருகிறார்” என கண்டனம் தெரிவித்தார்.