தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவருகிறது. இதனால் மாற்றுக்கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றன. அதன்படி, தஞ்சை ஆவூர் ஜமாஅத் தலைவர் ஹசன் பசீர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் EPS-ஐ சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். அவர்களை கட்சி துண்டு போர்த்தி வரவேற்ற EPS, அவர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.