கன்னியாகுமரியில் அதிமுக, திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இன்று இணைந்தனர். கன்னியாகுமரி நகராட்சி அந்தோனியார் தெருவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.மாதவன் தலைமையில் தவெகவில் இளைஞர்கள், பெண்கள் பலர் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.