சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா, சினேகா, ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பில் ரூ.100 கோடிக்கும் அதிகமான பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் முதல் பாடல் (First Single) வரும் செப்டம்பர் 14 அன்று காலை 10 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம், தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பரில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.