தமிழகம் முழுவதும் 45 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.8.21 லட்சம் ரொக்கப் பணம் சிக்கியது. மேலும், ஜி-பே (G-Pay) மூலமாக பெறப்பட்ட ரூ.1.50 கோடி அளவிலான லஞ்சப் பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டு, மொத்தம் ரூ.1.59 கோடி முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.