AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதலமைச்சர் விஜய் பேசுவது போன்ற வீடியோ மற்றும் ஆடியோவை உருவாக்கி பண மோசடியில் ஈடுபடும் கும்பல் குறித்து புகார் எழுந்துள்ளது. குறிப்பாக வெளிமாநிலங்களில் முதலமைச்சர் விஜயே பேசுவது போல் போலி ஆடியோவை உருவாக்கி, பொதுமக்களிடம் பணம் கேட்டு மோசடி செய்ததாக கூறப்படுகிறது. சந்தேகத்திற்கிடமான மோசடி காணொளி தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: பாலிமர்