அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பார்த்து, பிரதமர் மோடி பயப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (அக்.16) விமர்சித்துள்ளார். மேலும், ரஷிய எண்ணெய் வாங்குவது குறித்த முடிவை டிரம்ப் அறிவிக்க அனுமதிப்பது, மீண்டும் மீண்டும் அவமதிக்கப்பட்ட பிறகும் வாழ்த்துச் செய்தி அனுப்புவது, நிதி அமைச்சரின் அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்தது போன்றவற்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.