தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டிற்கு வரும் மோடி இட்லி, தோசைதான் பிடிக்கும் என்பார். 4 மாதங்களுக்கு இப்படித்தான் பேசுவார்” என்றார். மேலும், “திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், அக்கட்சியுடன் மட்டும்தான் பேசி வருகிறது” என்றார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
நன்றி: தந்தி