சென்னை மெரினா கடற்கரையில், 'நீலக்கொடி' திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்காக 352 மீட்டர் தூரத்திற்கு நவீன நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரை மணலில் எளிதில் சென்று வர வசதியாக, அலுமினியம் மற்றும் துருப்பிடிக்காத எஃகு சட்டங்களால் வடிவமைக்கப்பட்ட 10 பலூன் சக்கர நாற்காலிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வசதி மாற்றுத்திறனாளிகளுக்கு கடற்கரையை அனுபவிக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
நன்றி:சன்நியூஸ்