டெல்லியில் பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் முப்படை தலைமை தளபதி அனில் சௌகான் பேசினார். அப்போது, “காலாவதியான ஆயுதங்களைக் கொண்டு இந்தியா நவீன போர்களை எதிர்கொள்ள முடியாது. நேற்றைய ஆயுதங்களால் இன்றைய போர்களை வெல்ல முடியாது. இன்றைய போர்களை எதிர்த்து போராட நாளைய தொழில்நுட்பம் தேவை. ட்ரோன் தொழில்நுட்பங்களை உருவாக்குவது மிகவும் அவசியம். நம் ட்ரோன்கள் சக்தி வாய்ந்தவையாக உருவாகியுள்ளது" என்றார்.