சென்னை மாநகராட்சியில் பயணிகளின் வசதிக்காக உயர்தர ‘ஸ்மார்ட்’ பேருந்து நிழற்குடைகளை அமைப்பதற்கு ஆன்லைன் மூலம் மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிழற்குடைகளில் பொதுமக்களுக்கு இலவச வைஃபை, மொபைல் போன் சார்ஜிங் மையங்கள் மற்றும் அவசர உதவிக்கான ‘பேனிக் பட்டன்’ உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கட்டமைக்கப்படவுள்ளன. பயணிகளுக்கு மேம்படுத்தப்பட்ட பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.