விரிவடைந்து வரும் கலாசார நகரமான மைசூரை, 'நவீன மைசூராக' மாற்றும் திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக மாநில நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் தெரிவித்தார். "தலைநகர் பெங்களூரு போன்று, மைசூரு நகரமும் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. எனவே, நகரை சுற்றி உள்ள பகுதிகளையும், மைசூருக்குள் கொண்டு வந்து, ஒட்டுமொத்தமாக மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்.