வட தமிழகக் கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 13 வரை வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.