இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலை நோக்கி செல்லும். இதன் காரணமாக நாளை (பிப்., 18) முதல் 21ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 2002-ம் ஆண்டுக்குப் பிறகு பிப்ரவரி மாதத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.