தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் மாடல் அழகி மதுமிதா தாஸ்

மும்பையை சேர்ந்த மாடல் அழகி மதுமிதா தாஸ், டி.அந்தோணி இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள 'ஏன் என்னை ஏதோ செய்தாய்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தாயை இழந்த நாயகனின் வாழ்க்கையில் காதல் ஏற்படுத்தும் மாற்றங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட காதல் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. திரைப்படத்தின் அறிமுக விழாவில் பேசிய மதுமிதா, சவாலான கதாபாத்திரத்தில் தனது உழைப்பை கொடுத்துள்ளதாக தெரிவித்ததுடன் தமிழ் சினிமா ரசிகர்கள் தனக்கு ஆதரவளிப்பார்கள் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕