ஜூன் முதல் மொபைல் ரீசார்ஜ் கட்டணம் விலை உயர்வு? வெளியான தகவல்

இந்தியாவில் வரும் ஜூன் 2026 முதல் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் சுமார் 15% வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக பிரபல நிதி ஆய்வு நிறுவனமான 'ஜெஃப்ரீஸ்' தெரிவித்துள்ளது. 2024-ம் ஆண்டுக்கு பிறகு, சுமார் 2 ஆண்டுகள் கழித்து இந்த விலை உயர்வு அமலுக்கு வரவுள்ளது. 5G நெட்வொர்க் விரிவாக்கம், அதிகரித்து வரும் தரவு பயன்பாடு மற்றும் பராமரிப்பு செலவுகள் காரணமாக, ஒரு பயனரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாயை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளன.

தொடர்புடைய செய்தி