எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் விடுதலை

கிருஷ்ணகிரி: தளி அருகே பி.குருபரப்பள்ளியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிர்வாகி பாஸ்கர் கொலை வழக்கில், தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன் உட்பட 12 பேரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்தது. 2013-ல் காணாமல் போன பாஸ்கரின் உடல் கர்நாடக எல்லையில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. இந்த வழக்கில் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 13 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் நீதிபதி லதா இந்த தீர்ப்பை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி