திருச்செந்தூரில் இன்று திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருச்சி கிழக்கில் முதல்வர் ஜோசப் விஜய் ராஜினாமா செய்த நிலையில், அங்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. அதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட வேண்டும் எனவும், அவரை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறியுள்ளார்.
நன்றி: நியூஸ் 18