தமிழகத்தை பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடைக்கு மேடை முழங்கிக் கொண்டிருப்பது அவரின் அறியாமையையே வெளிப்படுத்துகிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், நந்தனம் அரசு கலைக்கல்லூரி உணவக விடுதியில் பணியாற்றி வந்த இளம்பெண் 3 பேர் கும்பலால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகிறது என கூறியுள்ளார்.