ராகுலிடமிருந்து அழைப்பு வந்ததை உறுதி செய்த மு.க.ஸ்டாலின்

சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பைத் தான் மறுத்துவிட்டதாக வெளியான தகவல் குறித்து முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். தனக்கு அழைப்பிதழ் வரவில்லை எனவும், தனது உதவியாளரிடம் செல்போன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் விழாவுக்கு வாழ்த்து கூறியதோடு, வாழ்த்துக் கடிதமும் அனுப்பியுள்ளதாக ஸ்டாலின் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி

✕
✕