பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி வருகிற 30ம் தேதி நடைபெற உள்ளது. ஐ.பி.எல். போட்டியில் லக்னோ அணிக்காக விளையாடியபோது மிட்செல் மார்ஷுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதால், அவர் பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் அணியை வழிநடத்துவார். இந்த தொடர் முடிந்ததும் ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்திற்குச் செல்லவுள்ளது.