இந்தோனேசியாவில் 11 பயணிகளுடன் சென்ற ஏடிஆர் 42-500 விமானம் தரைக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜாவா–சுலவேசி தீவுகளுக்கு இடையிலான மலைப்பாங்கான பகுதியில் இன்று (ஜன.17) மதியம் 1.17 மணியளவில் விமானம் தொடர்பை இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தில் கடல்சார் மற்றும் மீன்வளத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 11 பேர் பயணித்தனர்.