மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்குக்கு 227 பயணிகளையும் 12 விமானப் பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு MH370 என்ற மலேசிய விமானம் புறப்பட்டது. அந்த விமானம் வியட்நாம் வான் பரப்பை நெருங்கிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானது. கடந்த 2014ல் இச்சம்பவம் நடந்த நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது காணாமல் போன விமானத்தின் சிதைந்த பகுதிகளைத் தேடும் பணியை மீண்டும் தொடங்க மலேசியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.