அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர் ஏரியில் சடலமாக மீட்பு

அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர் ஸ்ரீனிவாசய்யா (22), மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த 10-ம் தேதி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பெர்க்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஏரியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி