சிறுமி மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் அக்., 12ஆம் தேதி காணாமல் போன 7 வயது சிறுமி தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி மறுநாள் அதிகாலையில் காணாமல் போனார். சிறுமியை தேடும் பணி 10வது நாளாக நீடிக்கும் நிலையில், தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். ஏற்கனவே ஜோதிடர் மற்றும் சிறுமியின் தாயிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி

✕
✕