மதுரை மாவட்டம் மேலூர் அருகே மாயமான 7 வயது சிறுவன், வீட்டின் அருகே உள்ள பாழடைந்த ஓட்டு வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் உடலில் காயங்கள் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இது கொலையா என்ற கோணத்திலும் சந்தேகத்தின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுவனின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், சம்பவ இடத்தை சுற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.