தெலங்கானா: 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுச்சாதா சுவாங் வென்றார். 73-வது உலக அழகி போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் பட்டம் வென்ற ஓபல் சுச்சாதாவிற்கு 2024 உலக அழகி கிறிஸ்டினா பிஜ்கோவா மகுடம் சூட்டினார். மேலும் அவருக்கு, ரூ.8.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. மிஸ் எத்தியோப்பியா 2-வது இடமும், மிஸ் போலந்து 3-வது இடமும் பிடித்தனர்.