சிறுமி பாலியல் பலாத்காரம்: 28½ ஆண்டுகள் சிறை

திருவள்ளூர் அடுத்த திருமழிசை பகுதியைச் சேர்ந்த அன்பு(எ) அன்பழகன், 2016-ல் 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் அவருக்கு 28½ ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.28 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அன்பு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி