கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இருவர் கைதான நிலையில், கார்த்திக்கிற்கு ஜூன் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவிட்டுள்ளார். கைதாகி காலில் முறிவு ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் கார்த்திக் சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்துவதற்காக, போக்சோ நீதிமன்ற நீதிபதி மருத்துவமனைக்கு சென்றார்.
நன்றி: பாலிமர்