மினிஸ்ட்ரி ஆஃப் டிரிங்ஸ்: மெரினா மீன் முதல் ரச ரம் வரை.. தர லோக்கல் விழா

சென்னையின் கலகலப்பான இதயத்தில், மினிஸ்ட்ரி ஆஃப் டிரிங்ஸ் (MOD) தன்னுடைய புதிய அத்தியாயத்தைத் துவங்கியுள்ளது – ஹை எனர்ஜி வைஃப், உலகத் தரம் வாய்ந்த உணவு கலை, மற்றும் இரவை உயிரோட்டமாக வைத்திருக்கும் பார் என அனைத்தையும் இணைத்து ஒரே இடத்தில வழங்குகிறது. ஸ்டைலான உள் அமைப்பு, சுவை மிகுந்த விரிவான மெனு, மற்றும் புத்துணர்ச்சி தரும் காக்டெய்ல்களால் சென்னை ஏற்கனவே உணவு, இரவுநேர வாழ்வு ரசனையாளர்களின் விருப்ப இடமாகி விட்டது.

இந்த ஆகஸ்ட் மாதத்தில், 'தர லோக்கல் உணவு விழா' என்ற ஒரு விசேஷமான நிகழ்ச்சி ஒளிரப்போகிறது. உலகம் முழுவதும் பயணம் செய்தாலும் தங்கள் சென்னையின் ஆன்மாவை இழக்காத ஷெஃப்கள் நவீன் மற்றும் மணி ஆகியோரால் இது சிந்திக்கப்பட்டது. சென்னையின் தெரு உணவு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்நிகழ்ச்சி ஒரு மாத காலம் நடைபெறுகிறது. கார சாரா Marina மீன் வறுவல் முதல் சுவை நிரம்பிய கட்டுச் சோறு, ஆறுதல் தரும் கொத்து பரோட்டா, ஸ்ட்ரீட் ஃபுட் மீன் குழம்பு-இட்லி வரை, ஒவ்வொரு தட்டும் உள்ளூர் நினைவுகளின் சுவையை நினைவுபடுத்தும்.

அற்புதமான உணவுக்கு, குடிப்பதற்கு எதாவது துணையாக இல்லாமல் முழுமையடையாது. பார் மேனேஜர் மோகன் மற்றும் ஜிஎம் சரவணன் தங்களின் தனித்துவமான சுவையை, பார் மேடையில் கொண்டு வருகிறார்கள். ரசம்–ரம் சேர்க்கை போல வித்தியாசமான “தாரூ பூரி”, சுவை மிகுந்த “பான் பட்டா துத்”, அல்லது புளிப்பான அன்னாசிப் பழத்தால் செய்யப்படும் புத்துணர்ச்சியூட்டும் “அண்ணாச்சி கள்ளு” போன்ற புதுமையான பானங்களை எதிர்பார்க்கலாம்.

ஆகஸ்ட் முழுவதும் நடைபெறும் இந்த தர லோக்கல் விழா, மினிஸ்ட்ரி ஆஃப் டிரிங்ஸை (MOD) மட்டும் பிரபலமடையச் செய்யவில்லை. சென்னையின் சுவை, ஒலி, ஆன்மாவையே கொண்டாட்டத்தின் மையத்தில் நிறுத்துகிறது.

தொடர்புடைய செய்தி