காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு மைதானத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் ரூ.49.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய வலைப்பயிற்சி கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர்களான தங்கம் தென்னரசு மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோர் இன்று (செப்.19) திறந்து வைத்து விளையாடினர். நவீன வசதிகளுடன் கூடிய இந்த வலைப்பயிற்சி மையம் காஞ்சிபுரம் பகுதி இளம் கிரிக்கெட் வீரர்களின் பயிற்சிக்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி:தந்தி