தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், 108 இடங்களை வைத்துள்ள தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளித்தால், அந்த அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோருக்கு புதிய அமைச்சரவையில் முக்கிய துறைகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இருப்பினும், இது குறித்து இரு கட்சிகளின் தலைமை நிலையிலிருந்தும் அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.