சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று (நவ.6) போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் நிலையில், பேருந்து வசதிகள், பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக் கூறியவருக்கு பதிலாக பிறந்தநாள் வாழ்த்துகள் எனக் கூறியது அங்கிருந்தவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
நன்றி: PT