அறிவியல் கல்லூரிக்கு விளையாட்டு அரங்கம் குறித்து அமைச்சர் விஸ்வநாதன் பதிலளித்தபோது எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டதால், "எதையுமே பேசக்கூடாதா சார் ?" என அவர் கேட்டது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, "யாரும் அவசரப்பட்டு என்னிடம் கோரிக்கை வைத்துவிடாதீர்கள். யோசித்து கேள்வி கேளுங்கள்" என அவர் சொல்வது போல உள்ளது என தெரிவித்தார். உதயநிதியின் இந்த கருத்துக்கு சபாநாயகர் மற்றும் MLA-க்கள் அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.
நன்றி:SunNews