தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மேடை முழுவதும் இருள் சூழ்ந்தது. இருப்பினும், அமைச்சர் தமிழ்நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சிறப்பாக ஆட்சி நடப்பதாகப் பேசியபோது, அங்கிருந்தவர்கள் கைதட்டி சிரித்தனர். இந்தச் சம்பவத்தால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.