குடும்பத் தகராறில் தனது சகோதரரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கின் சமரசப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், அமைச்சர் மரிய வில்சன் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றச் சமரசத் தீர்வு மையத்தில் மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று மூன்றாவது முறையாக அமைச்சர் மரிய வில்சன் மற்றும் அவரது சகோதரர் மரிய குலோத் ஆகியோர் நீதிபதி முன்பாக ஆஜராகி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாகச் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.