மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசிய தவெக அமைச்சர் கீர்த்தனாவுக்குப் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். பொறுப்பான பதவியில் இருப்பவர் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியது ஏற்கத்தக்கதல்ல எனச் சமூக ஆர்வலர்கள் சாடினர். இந்நிலையில், கீர்த்தனா தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார், “மாற்றுத் திறனாளி தாய்க்கு பிறந்த மகள் நான்; அந்த வலியும், வேதனையும் எனக்கு உள்ளது. அறியாமல் செய்த தவறை அரசியலாக்க வேண்டாம்” என விளக்கம் அளித்துள்ளார்.