மாணவர்கள் தங்கும் தனியார் விடுதிகளில் போலீசார் சோதனை

கோவை சரவணம்பட்டியில் உள்ள மாணவர்கள் தங்கும் தனியார் விடுதிகளில் 70-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் அறைகளில் போதைப் பொருட்கள் உள்ளதா? மாணவர்கள் அல்லாத வேறு நபர்கள் தங்கியுள்ளார்களா? என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சரவணம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளைஞர்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாக புகார் எழுந்த நிலையில், இதுபோன்று ஏற்கனவே பலமுறை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி